நிலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதிகளில் வெயிலின் கடும் தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டு மரங்கள் முற்றிலும் காய்ந்துள்ளன. இதன் காரணமாக இன்று ஆச்சக்கரை பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீ என்பது காட்டுப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் தானாகவே அல்லது மனித நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படும் தீவிபத்தாகும். இது மிகவேகமாக பரவி சுற்றுச்சூழல், உயிரினங்கள் மற்றும் மனித வாழ்வுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இந்நிலையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை அருகே, மூங்கில் மரங்கள் அதிகம் உள்ள ஆச்சக்கரை பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. நீண்ட நாட்களாக வறட்சியால் காய்ந்திருந்த மரங்கள் எரிவதால், தீயின் கொழுந்து சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு பறந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுத்தீ உருவாகும் காரணங்கள்:
இடி, மின்னல் (Lightning): பெரும்பாலான காட்டுத்தீ இடி விழுவதன் காரணமாக உருவாகிறது.
அதிக வெப்பநிலை (High Temperature): வெப்பமான, வறண்ட காலநிலையில் செடிகள் மற்றும் மரங்கள் எரியக்கூடியதாக மாறும்.
வலுவான காற்று (Strong Winds): காற்றின் வேகம் அதிகமாக இருப்பின், தீ விரைவாக பரவும்.
வறட்சி (Drought Conditions): நீரின்றி வறண்ட நிலைமையில் செடிகள் மற்றும் மரங்கள் எரிவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும் இந்த காட்டுத்தீ அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், பலத்த காற்று ஆகையாவியால் வேகமாக அடுத்தடுத்து பரவும். அதே போல் மலை மற்றும் வறண்ட நிலப்பரப்பகளிலும், உலர்ந்த மரங்கள், இலைகள், புல்கள் போன்றவைகளால் தீ வேகமாக பரவும்.
காட்டுத்தீயை தடுப்பதற்கான வழிகள்:
தீ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல். மனிதனால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது. காட்டுத் தீ பரவும் பகுதிகளில் கண்காணிப்பு கருவிகளை (CCTV, Drones) பயன்படுத்துதல். காட்டுப் பகுதிகளில் முறையான தீயணைப்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவையால் காட்டுத்தீயை தடுக்க முயற்சிக்கலாம்.
Read More: தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை…!