கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல் வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், அவர்கள் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் 75 பேரை கண்காணித்து வருவதாகவும் என்றும் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மரணத்திற்கு நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருப்போம் என்றும் இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.