fbpx

நிபா வைரஸ் 2 பேர் பலி..! இறந்தவர்களின் தொடர்புடைய 168 பேர் கண்டுபிடிப்பு..! முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்.., தீவிர கண்காணிப்பில் கேரளா..!

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி உயிரிழந்தார். இதேபோல கடந்த 11ஆம் தேதி அதே மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தார்.

இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதி உயிரிழந்தவர்களின் மாதிரிகள் உடபட 4பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. நேற்று மாலை சோதனை முடிவுகள் வெளியானது, இதில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியாவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் இரண்டாவதாக இறந்த நபரின் மனைவி, 9 வயது, 4 வயது முறையேயான 2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 2 சிறுவர்களுக்கு தனிவார்டில் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பாதித்து இறந்த 2 நபர்களும் கோழிக்கோடு மாவட்டம் மருதங்கரா, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இறந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தனியார் மருத்துவமனையில் ஒன்றாக இருந்ததையும், இப்போது வரை, அவர்களைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதையும் சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இருவருக்கும் தொடர்புடைய 168 பேரை சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. முதல் வழக்கில், 158 தொடர்புகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களில் 127 பேர் மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் குடும்பம் அல்லது அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது வழக்கில், கிட்டத்தட்ட 200 தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவர்களில் 10 பேர் அவர்களின் மொபைல் எண்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அதிகாரிகளிடம் நிபா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையாக போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை மற்றும் அழைப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளன, மேலும் ஏதேனும் அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் கால் சென்டரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 2 பேர் நிபா வைரஸ் பாதித்து இறந்த சம்பவம் கேரளாவில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 17 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

கர்ப்பிணிகளே!… பிறக்கும் குழந்தையின் எடை குறைய இதுதான் காரணம்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Wed Sep 13 , 2023
காற்று மாசு அதிகரிப்பிற்கும், கர்ப்பிணிகள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து, எஸ்டோனியா ஆகிய 5 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 4,286 குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.இத்தாலியின் மிலனில் செப்., 9 முதல் 13 வரை நடைபெறும் ஐரோப்பிய சுவாசக்கழக சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள ஆய்வு முடிவுகளில், பசுமையான […]

You May Like