fbpx

10 ஆண்டு சிறையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு – இன்று விசாரணை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவித்தனர்.

மேலும் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி எஸ்.பி.ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தன் மீதான தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார் நிர்மலா தேவி. மேலும் இடைக்கால ஜாமீன் கோரியும் மனு செய்துள்ளார்.இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

Read More: PMO Modi | “ராமர் கோவிலை பாதுகாக்க பாஜக 400 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வேண்டும்..” பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு.!!

Baskar

Next Post

மழை குறித்த நற்செய்தி - இந்த 14 மாவட்ட மக்கள் மழையில் நனைய தயாராகுங்கள்..!

Wed May 8 , 2024
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மேலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. இந்த நிலையில் வெயிலில் இருந்து சற்று ரிலாஸ்க் பண்ணுவிதமாக வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தென்னிந்திய […]

You May Like