fbpx

நாளை இந்த பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை – காவல்துறை அறிவிப்பு!

புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு சுமார் 90 ஆயிரம் காவல்துறையினர், 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் வர வேண்டாம் எனவும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை எனவும் சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Kathir

Next Post

’கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு’..!! ஒரே கயிற்றில் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி..!! நடந்தது என்ன..?

Fri Dec 30 , 2022
புதுமண காதல் தம்பதிகள் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அனந்தமாடன் பச்சேரி காலனியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகன் தங்க முனியசாமி (28). இவர், அதே பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே உள்ள துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (22). இவர், அனந்தமாடன்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு […]
’கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு’..!! ஒரே கயிற்றில் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி..!! நடந்தது என்ன..?

You May Like