fbpx

சர்வதேச வாட்ஸ் அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம்..!! பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை..!!

தெரியாத எண்களில் இருந்து வரும் சர்வதேச வாட்ஸ்-அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணையும் போது, ​​வாட்ஸ்அப் பல இந்தியர்களுக்கு ஒரு தளமாக உள்ளது. ஒவ்வொரு தொழில்நுட்பமும் பல நன்மைகளுடன் வருகிறது. ஆனால், அதற்கு இருண்ட பக்கமும் உள்ளது. கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் வரும் தேவையில்லாத மோசடி அழைப்புகளை ரிப்போட், ப்ளாக் செய்யுமாறு வாட்ஸ் அப் தனது பயனர்களை கேட்டுகொண்டுள்ளது.

தெரியாத எண்களில் இருந்து வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழைப்புகளுக்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத அழைப்புகளை ப்ளாக் செய்ய வேண்டும். இருந்தபோதிலும் சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அறியப்படாத சர்வதேச வாட்ஸ்-அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளனர்.

அறியப்படாத சர்வதேச வாட்ஸ்அப் அழைப்புகள் மக்களின் தனிப்பட்ட தரவு, வங்கிக் கணக்குக்கு ஆபத்தானதாக முடியலாம் என தெரிவித்துள்ளனர். அத்தகைய அழைப்புகளை மறுத்து விடுங்கள், அவை பற்றிய விவரங்களை 1930-ல் பதிவிடுங்கள். சமீப காலமாக சைபர் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

BIG BREAKING: உச்சநீதிமன்றம் அதிரடி…! ராகுல் காந்தி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு..!

Fri Aug 4 , 2023
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி எனவும் அவருக்கு இரண்டு ஆண்டகள்சிறை தண்டனை விதிக்கப்படுவதாவும் சூரத் நீதிமன்ற உத்தரவிட்டது, இதை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த […]

You May Like