அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் பேச்சுவார்த்தை நடத்தவும் பிரேமலதாவுக்கு மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என பிரேமலதா கூறியிருந்தார்.
கூட்டணிக்கு தயார் என பிரேமலதா அறிவித்து ஒரு வாரமாகியும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக ஆர்வம் காட்டவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, கடைசிவரை தேமுதிகவை கூட்டணிக்கு சேர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.