fbpx

காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை!… ஜூலை 31-க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுங்கள்!… மத்திய அரசு!

காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க, வரி செலுத்துவோர் ஜூலை 31, 2023க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சம்பளம் பெறக்கூடிய வருமான வரி செலுத்தக்கூடிய நபர்கள் 2022-23 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். ஜூலை 11 ஆம் தேதி வரை AY 2023-24 (FY 2022-23) ஆண்டிற்கான இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்களை இரண்டு கோடிக்கும் அதிகமான நபர்கள் தாக்கல் செய்திருப்பதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. இதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜூலை 20 ஆம் தேதி வரை 2 கோடி ITRகள் தாக்கல் செய்யப்பட்டன.

AY 2023-24 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள் கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக செய்வதற்கு பதிலாக, விரைவில் தங்களது ITRகளை தாக்கல் செய்யுமாறு ஐடி துறை அறிவுறுத்தி வருகிறது.இரண்டு கோடி மைல்களை இந்த வருடம் 9 நாட்கள் முன்னதாகவே நாங்கள் அடைவதற்கு எங்களது டாக்ஸ்பேயர்கள் உதவி புரிந்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சியை நாங்கள் மனமார பாராட்டுகிறோம்!” என்று வருமானவரித்துறை தனது ட்வீட்டில் பதிவு செய்துள்ளது. வருமான வரி செலுத்தக்கூடிய பல நபர்கள் தாங்கள் சமீப நாட்களாக சந்தித்து வரும் பிரச்னைகளை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கான இ-ஃபைலிங் போர்ட்டல் மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், வருமான வரி தாக்கல் செய்யும் பொழுது தொடர்ந்து அதில் பல சிக்கல்களை அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து, வருமானவரித்துறை நீட்டிக்குமா என்பது குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் சிக்கல்களை அனுபவித்து வருவதால், ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஐடி துறை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக மீடியா அறிக்கைகள் கூறுகின்றன. உங்களது ITR -ஐ தாக்கல் செய்ய இன்னும் 16 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. ஆகவே தகுந்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்வது எந்தவித எதிர்கால அசெளகரித்தையும் தவிர்க்க உதவும்.

Kokila

Next Post

ஆசிரியர்கள் கவனத்திற்கு...! இன்று முதல் 20-ம் தேதி வரை..! துறை மாறுதல் கலந்தாய்வு..‌.! முழு விவரம்

Mon Jul 17 , 2023
அலகு விட்டு அலகு, துறை மாறுதல் கலந்தாய்வு தேதி மற்றும் செயல்முறைகள் அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. பார்வையில்‌ காணும்‌ இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி பிறதுறையில்‌ பணிபுரிந்து வரும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌, பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு, துறை மாறுதல்‌ மூலம்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரிய உரிய தடையிண்மைச்‌ சான்று பெற்று மாறுதல்‌ மூலம்‌ பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ கலந்தாய்வுக்கான […]
சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like