fbpx

நாகையை அலறவிட்ட ”No” குறியீடு..!! தீரன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்..!! நடுங்கிப்போன மக்கள்..!!

நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடச் சென்ற மர்ம நபர்கள் எதிர்பார்த்து வந்த அளவு பணமோ பொருட்களோ இல்லாததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று வீட்டில் No என்று எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி ஆசாத் நகரைச் சேர்ந்தவர்கள் ஜியாவுதீன், சமீமா. இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு வெளியூர் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாகச் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர் அதிகாலையில் போகும்போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஜியாவுதீனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, பதறியடித்து ஓடி வந்தவர்கள், வீட்டிலிருந்த 5 ஆயிரம் ரொக்கமும், விலை உயர்ந்த வாட்சுகளும், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணமும் காணவில்லை எனக் கூறியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நாகையை அலறவிட்ட ”No” குறியீடு..!! தீரன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்..!! நடுங்கிப்போன மக்கள்..!!

வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டு மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிட்டு ‘நோ’ என்று குறியீடு வைத்துச் சென்றுள்ளனர். அப்படி என்றால் திருடுபவர்கள் கும்பலாகச் செயல்படுகிறார்களா, அவர்களுக்கான குறியீடா என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து திருப்பூண்டி பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெறுவதால் திருப்பூண்டி பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chella

Next Post

#திருச்சி :இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகளுக்கு.. கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி..!

Sat Nov 26 , 2022
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பாலக்கரை அருகில் இருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தம்பதிகள் கிருஷ்ணன் (91) மற்றும் மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் என்பவர் மண்ணச்சநல்லூர் மகன் வீட்டிலும் மற்றும் சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் பகுதியில் மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் சம்பூரணத்தம்மாள் வயது […]

You May Like