சென்னையில் பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் ஒரு 4 விஷயத்தை ப்ராசஸ் செய்து உண்மையை சொல்லக்கூடிய திறன் இருக்கிறதா? குடும்ப ஆட்சி என்பது மொத்தமாக தமிழ்நாட்டை சீரழிக்கும். மாநிலத்தின் ஆட்சியில் இருந்து ஆரம்பித்து மேயர் ஆட்சியில் உள்ளே வந்து முழுவதுமாக சிஸ்டத்தை கெடுத்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கி வைத்திருக்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது நெல்லை மேயர் எங்கே இருந்தார் தெரியுமா? சேலம் மாநாட்டிற்காக பந்தல் போட்டுக்கொண்டிருந்தார். நெல்லையில் யாரும் இல்லை. சரி மழை வந்துவிட்டது. பார்வையிட யார் போக வேண்டும்? அமைச்சர் கே.என்.நேருவும், துரைமுருகனும் செல்ல வேண்டும். ஆனால், அவர்களுக்கு பதிலாக உதயநிதி போய் பார்க்கிறார்.
சேலம் இளைஞரணி மாநாடு முடிவதற்கு முன்போ அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்போ உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கும் விஷயத்தில் ஸ்டாலின் தெளிவாக உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் கவனம் முழுவதும் ஆட்சியில் இல்லை. அவர் மகன் உதயநிதியை துணை முதல்வராக கொண்டுவந்து.. முதல்வராக்க வேண்டும் என்பது தான்” என்றார்.