fbpx

”ஆதாரங்கள் இல்லை”..!! நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது..!! உச்சநீதிமன்றம் அதிரடி..!!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில் 813 மாணவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். மீதமுள்ள 48 சதவீதம் மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் இல்லாமல் உண்மையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மறுதேர்வு எழுதியவர்களின் முடிவுகள் ஜூன் 30இல் வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய மதிப்பெண் தரவரிசைகள் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான, 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வில் பெரியளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், தேர்வை ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் முழு தேர்வையும் ரத்து செய்தால் இந்தாண்டு நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மறுவிசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்ததாவது, ‘இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ தரப்பிலும் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் நிரூபித்தால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது’ என்றார். நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Read More : ‘அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது’..!! ‘அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன்’..!! ரோஜா விளக்கம்..!!

English Summary

The Chief Justice of the Supreme Court categorically stated that NEET re-examination cannot be conducted.

Chella

Next Post

கொலை மிரட்டல்..!! எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது..!! ஜெயிலில் வைத்தே சிபிசிஐடி நடவடிக்கை..!!

Thu Jul 18 , 2024
Mr. Vijayabaskar, who has been arrested in a land fraud case and is in jail, has also been arrested in another case.

You May Like