fbpx

தேர்வு இல்லை.. ரூ. 35 லட்சம் வரை சம்பளம்.. எஸ்பிஐ வங்கியில் 665 காலியிடங்கள்..

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 665 சிறப்பு கேடர் அதிகாரிகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு செயல்முறை ஆகஸ்ட் 30 அன்று தொடங்கிய நிலையில் இந்த பணிகளுக்கு, செப்டம்பர் 20 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் ( விண்ணப்பம், அடையாளச் சான்று, வயதுச் சான்று, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவை) பதிவேற்றம் செய்ய வேண்டும்.” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்

  • மேலாளர் (வணிக செயல்முறை) – 1
  • மத்திய செயல்பாட்டுக் குழு – 2
  • மேலாளர் (வணிக மேம்பாடு) – 2
  • திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்) – 2
  • உறவு மேலாளர் – 335
  • முதலீட்டு அதிகாரி – 52
  • மூத்த உறவு மேலாளர் – 147
  • ரிலேஷன்ஷிப் மேனேஜர் (டீம் லீட்) – 37
  • மண்டலத் தலைவர் – 12
  • வாடிக்கையாளர் உறவு நிர்வாகி – 75

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது..?

  • படி 1: எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • படி 2: முகப்புப் பக்கத்தில், SO ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • படி 3: நீங்களே பதிவு செய்யுங்கள்
  • படி 4: விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
  • படி 5: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும். சமர்ப்பிக்கவும்
  • படி 6: எதிர்கால குறிப்புக்காக படிவத்தை பதிவிறக்கம் செய்து சேமித்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பதாரர்கள் பொது, EWS, OBC பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 750 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செயல்முறை : நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே வங்கி தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் அவர்களின் வயதுக்கு ஏற்ப இறங்கு வரிசையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி மற்றும் அனுபவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சம்பளம் : தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப ரூ.2.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

Maha

Next Post

கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள் இவைதான்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Thu Sep 1 , 2022
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வட தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கடலூர், […]
தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

You May Like