fbpx

“பட வாய்ப்புகள் இல்லை,, கழிவறை சுத்தம் செய்தேன்” – பிரபல நடிகர் உருக்கம்!

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். 1996ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான காதல் தேசம் திரைப்படம் மெகா ஹிட்டானது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் மாஸ் காட்டி வந்த அப்பாஸ், பட வாய்ப்புகள் குறைந்து போகவே சமீப காலமாக திரையில் காணாமல் போனார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது செட்டிலாகிவிட்டார். தற்போது அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இதில் அவர் “சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்சி டிரைவராகவும் நியூசிலாந்தில் வேலை செய்துளேன்” என கூறினார். திரையுலகில் உச்சத்தில் இருந்த அப்பாஸ், தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Next Post

2 ஹெலிகாப்டர்கள் மோதி சிதறும் பதைபதைக்கும் காட்சி..!! 10 பேர் பலி..!!

Tue Apr 23 , 2024
மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக 6-க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. அப்போது, 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கும் பதற […]

You May Like