ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள வங்கிகளுக்கு அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் முழு நாள் விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி, பொங்கல், உள்ளூர் பண்டிகை போன்ற நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தான், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் இந்தாண்டு 31ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட இந்த தினம், நடப்பு நிதியாண்டின் கடைசி நாளும் கூட. இதனால், அனைத்து வங்கிகளும் திங்கட்கிழமை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும் வழக்கமான வேலை நாளாகவும், அரசு பரிவர்த்தனை செயல்பாடுகளுக்காகவும் திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.