fbpx

அதிரடி முடிவு…!ஜீன்ஸ்,லெக்கின்ஸ்,டி-சர்டுக்கு தடை…! ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…!

அஸ்ஸாம் அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிலர் முகம் சுழிக்கும் வகையில் ஆடைகளை உடைத்து பள்ளிக்கு வருவதால் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தடை செய்யப்பட்ட ஆடைகளில், ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ், பெண் ஆசிரியர்களுக்கான லெக்கின்ஸ் ஆகியவை அடங்கும். அனைத்து ஆசிரியர்களும் “சுத்தமான, அடக்கமான மற்றும் கண்ணியமான ஆடைகளை நிதானமான வண்ணங்களில் அணிந்திருக்க வேண்டும்.

ஆடையின் நிறம் முகம் சுழிக்கும் பளிச்சென்று தோன்றக்கூடாது” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சாதாரண மற்றும் பார்ட்டி ஆடைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்” என்று அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2000 Rupee Note..!! செல்லாத ரூ.2,000..!! வங்கியில் மாற்றுவது எப்படி..? புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

Sun May 21 , 2023
நாடு முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000, 500, 200, 100, 50 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து […]

You May Like