fbpx

’இந்தியாவைப் போல் உலகில் எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை’..! – மத்திய அமைச்சர்

உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ”ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார். ஊடகங்கள் பொறுப்பை மீறி, எங்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்வதாகவும், இது போன்ற செயல்பாட்டினால் நீதி வழங்குவது பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அச்சு ஊடகம் குறிப்பிட்ட அளவு பொறுப்புணர்வைக் கொண்டுள்ளது என்றும் ஆனால், மின்னணு ஊடங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

’இந்தியாவைப் போல் உலகில் எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை’..! - மத்திய அமைச்சர்

இந்நிலையில், மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் தற்போதைய சூழலை பிரதிபலிப்பதாகவும், இது குறித்து தாம் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இதுகுறித்து யாரும் பேச விரும்பினால், பொது களத்தில் விவாதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்றும், இந்தியாவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்த நீதிபதியோ அல்லது நீதித்துறையோ இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று என்னால் தெளிவாக கூற முடியும்” என்று கூறினார்.

Chella

Next Post

பருவமழையை எப்படி எதிர்கொள்வது? முன்கூட்டியே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கும் தீயணைப்புத்துறை..!

Sun Jul 24 , 2022
பருவமழையை எதிர்கொள்ளும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருகிறது. இந்நிலையில், மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிப்பது குறித்து பழனி தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்து வருகின்றனர். அந்த துண்டு பிரசுரத்தில், “மழைநீர் செல்லும் பாதையை சுத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும். மழை குறித்து ஊடகங்களில் வரும் அறிவிப்புகளை கவனமாக […]
தமிழகத்தில் இன்று மிக கனமழையும், கனமழையும் பெய்யும்..!! எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கும்..?

You May Like