ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.ஏல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் பங்கேற்கவில்லை.
அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக செங்கோட்டையன் தலைமையில் சந்திக்க வேண்டுமென சிலர் விருப்பம் தெரிவித்ததக கூறப்படுகிறது. ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் தான், செங்கோட்டையன் தன்னுடைய அதிருப்தியை இவ்வாறு வெளிக்காட்டி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவில் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டது தெரிந்தும், அவரை திமுக தரப்பு தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் திமுக மேலிடத்திலேயே செங்கோட்டையன் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அதிமுகவை ஒருங்கிணைக்க மட்டுமே விரும்புவதாகவும், திமுகவுக்கு வர விருப்பமில்லை என்றும் செங்கோட்டையன் பளிச்சென தெரிவித்துள்ளார்.
திமுகவை தொடர்ந்து, விஜய்யின் தவெகவும் செங்கோட்டையனை தங்களது பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், நான் எப்போதும் அதிமுகவில் தான் இருப்பேன் என செங்கோட்டையன் உறுதியாக சொல்லிவிட்டாராம். முடிந்த அளவுக்கு அதிமுகவை ஒருங்கிணைக்க போராடுகிறேன் என்றும் அப்படி இல்லையென்றால், நடப்பது நடக்கட்டும் என்றும் சொல்லிவிட்டாராம்.
Read More : திடீரென தடம் புரண்ட ரயில்..!! ஜல்லி கற்களை உரசி சென்ற என்ஜின்..!! திருவாரூரில் பரபரப்பு..!!