fbpx

”எவ்வளவு சொல்லியும் திருந்த மாட்டியா”..? மனைவியுடன் உல்லாசம்..!! பனியன் கம்பெனி ஊழியர் வெட்டிக்கொலை..!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பீகார் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பவன் யாதவ் (27). இவர், திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரி (50) குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உபேந்தரதாரி பவன் யாதவ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பவன் யாதவை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பவன் யாதவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய உபேந்தரதாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

ரஷ்ய அதிபர் புடினுக்கு இந்த நோயா..? மார்ச் மாதம் முதல் சிகிச்சை.. வெளியான புதிய தகவல்..

Tue Feb 21 , 2023
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.. அந்த வகையில் தற்போது புடினின் உடல்நிலை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.. சமீபத்தில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, புடினை சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின் போது புடின் […]
இனி உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்..! ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

You May Like