fbpx

‘என்ன ஆனாலும் இதை மட்டும் விட மாட்டேன்’..!! கண்டித்த பிக்பாஸ்..!! டென்ஷன் ஆன பிரதீப்..!!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய நிலையில், 3 பேர் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர். அத்துடன், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள விதிமுறையை மீறும் விதத்தில் நடந்து கொண்ட பூர்ணிமாவின் கேப்டன்சிக்கே, கிடைத்த கேப்பில் எல்லாம் ஆப்பு வைத்து வந்துள்ளார் பிரதீப். அதன்படி, மேக்கப் பொருட்களை உபயோகிக்க கூடாது என பிக்பாஸ் கூறியுள்ள நிலையில், பூர்ணிமா அதை மீறும் விதமாக தனது உதட்டிற்கு நெய்யை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தி தன்னை அலங்கரித்துக் கொண்டுள்ளார். இதை கவனித்து பிக்பாஸ் அவரை கண்டிக்கிறார்.

எனினும், பூர்ணிமா செய்ததை ஏனைய போட்டியாளர்கள் Fun-ஆக பார்த்தாலும், பிரதீப் மட்டும் திடீரென கோபமாகி ‘நீ உன் மேக்கப்பை தியாகம் செய்ய முடியாது என்றால், நாங்கள் மட்டும் ஏன் எங்கள் பசியை தியாக செய்யணும். நீ இப்படி செஞ்சதுக்கு இந்த வாரம் வாயவே திறக்க கூடாது. இல்லை கேப்டன்சியை தியாகம் செய்ய வேண்டும்’ என கூறுகிறார். இதற்கு பூர்ணிமா ‘கேப்டன்சியை விட்டு கொடுக்க மாட்டேன்’ என கோபமாக கூறுகிறார். இதற்கான தண்டனை பிக்பாஸ்ஸிடம் இருந்து கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Chella

Next Post

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Fri Oct 27 , 2023
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, சவரன் ரூ.45,640 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கம் நேற்று ஒரு […]

You May Like