fbpx

இனி 10 ரூபாய் நோட்டுக்களை பார்க்கவே முடியாது..!! காரணம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா..?

மக்களின் அன்றாட பயன்பாட்டில் ரூ.10 நோட்டுக்கள் முக்கிய அங்கம் வகித்தன. ஆனால், இப்போதெல்லாம் 10 ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே கடினமாகிவிட்டது. அவ்வாறு புழக்கத்தில் இருந்தாலும் அவை கிழிந்த பழைய நோட்டுக்களாகவே உள்ளன. புதிய 10 ரூபாய் நோட்டுக்களை பார்க்கவே முடியவில்லை. இப்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுக்கள் சட்டை பையில் வைத்தாலே கிழிந்துவிடும் நிலையில், இருக்கிறது. 10 ரூபாய் நோட்டுக்கள் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பது நிறைய பேருக்கு தெரியாது.

நாட்டில் ரூபாய் நோட்டுக்களை RBI நோட் பிரிண்ட் பிரைவேட் லிமிடெட் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அச்சடிக்கிறது. கடந்த 2019-20ஆம் நிதியாண்டில், ரூ.147 கோடி மதிப்பில் ரூ.10 நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன. அதற்கு அடுத்த நிதியாண்டில் ரூ.128 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் வெறும் ரூ.75 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அச்சிடப்பட்டன. இதன் மூலம் படிப்படியாக 10 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது குறைக்கப்படுவதை உணர முடியும்.

கொரோனாவுக்கு பிறகு, ரிசர்வ் வங்கி தரமான பண திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன் காரணமாக பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மணிகண்ட்ரோல் அறிக்கையின்படி, 20 ரூபாய் நோட்டுக்களை விட 10 ரூபாய் நோட்டுக்களை தயாரிக்க அதிக செலவாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் சந்தைக்கு வராததற்கு இதுவும் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

Read More : 3 நாட்கள் நைட் ஷிப்டு பார்த்தாலே இவ்வளவு ஆபத்தா..? இளைஞர்களே உஷார்..!!

Chella

Next Post

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா..? மாணவர்களே கவலை வேண்டாம்..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிடலாம்..!! தேதி அறிவிப்பு..!!

Sat May 11 , 2024
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சியடையாத மற்றும் தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு வரும் 16ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் […]

You May Like