fbpx

’இனி அட்வைஸ் இல்ல.. அரெஸ்ட் தான்’..!! ‘கல்லூரியில் இருந்து நீக்கம்’..!! மாணவர்களுக்கு எச்சரிக்கை..!!

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை அவர்களின் கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கல்லூரிகளில் ஒருவருக்கொருவர் இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக ரயில் நிலையங்களை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

இதில் சில மாணவர்களின் உயிர் பறிபோவதோடு, பயணிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சில பயணிகளும் காயமடைந்தனர். இதையடுத்து, தீவிர ரோந்து பணிகளை ரயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கூறுகையில், “ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் பயனில்லை. இதனால், கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Chella

Next Post

பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை…! பள்ளி கல்வித்துறை உத்தரவு..

Wed Nov 1 , 2023
புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த நாளுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு கல்லறை திருநாளுக்கும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள சுற்றறிக்கையில், […]

You May Like