fbpx

இனி ஆயுஷ்மான் பாரத் இல்லை!… ஆரோக்கிய மந்திர்!… சுகாதார மையங்களின் பெயர் மாற்றம்!… மத்திய அரசு அறிவிப்பு!

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களின் பெயர்களை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், ‘ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Kokila

Next Post

அழிவின் அபாயத்தில் உயரினங்கள்!… நகர தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!… விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

Mon Nov 27 , 2023
அண்டார்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பணிப்பாறை சிறிது சிறிதாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் சுமார் 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள A23-a என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நியூயார்க் நகரத்தை விட 3 மடங்கு பெரியதாகும். இந்த அளவுக்கு பெரிய அளவிலான பனிப்பாறை நகர்தலை பார்ப்பது அரிது என்று தெரிவித்துள்ள பிரிட்டனை சேர்ந்த அன்டார்டிக் பனிப்பாறை நிபுணர் டாக்டர்.ஆலிவர்மார்ஷ், விஞ்ஞானிகள் […]

You May Like