fbpx

இனி ”இந்தியா”கிடையாது..!! ஜி20 மாநாட்டிற்காக மத்திய அரசு செய்த காரியத்தை பாருங்க..!! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

ஜி20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டில் இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழ் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் ”பாரத் குடியரசு தலைவர்” என அச்சிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாரத குடியரசுக்கு வாழ்த்துகள் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதுமே நாட்டின் பெயர் பாரத் என்பதையே இனி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் என கூறியிருந்தார். தற்போது ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழிலும் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

இளைஞருக்கு மயக்க மருந்து..!! பிறப்புறுப்பை அறுத்துப் போட்ட திருநங்கைகள்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

Tue Sep 5 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடன கலைஞராக இருந்து வருகிறார். இவர், கடந்த 14 ஆண்டுகளாக திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி, ராம்பூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு, தனது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, காரில் அவரை பின் தொடர்ந்த 6 பேர், அவரை தடுத்து நிறுத்தி […]

You May Like