fbpx

இனி கேரளா அல்ல ‘கேரளம்’..!! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கேரளாவை ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் பெயரான கேரளா என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அரசியல் சாசனம் மற்றும் அரசு ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மாநில அரசு விரும்பியது. இதற்காக கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.

முன்னதாக நேற்று பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது கேரள சட்டமன்ற கூட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.

Chella

Next Post

”இனி பைக்கே தேவையில்ல போல”..!! தரமான 2 இ-சைக்கிள்கள் அறிமுகம்..!! இவ்வளவு வசதிகள் இருக்கா..? 60 கிமீட்டராம்..!!

Wed Aug 9 , 2023
மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான விர்சுஸ் மோட்டார்ஸ் இந்தியாவின் இ-சைக்கிள் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. அவை, ஆல்ஃபா ஏ (Alpha A) மற்றும் ஆல்ஃபா ஐ (Alpha I) ஆகும். இந்த இரண்டும் இந்திய விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் வாங்குபவர்களுக்கு சலுகை விலையில் விற்பனைக்கு வழங்கவும் விர்சுஸ் மோட்டார்ஸ் நிறுவனம் […]

You May Like