fbpx

’இனி ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு வரை செல்லாது’..!! அமைச்சர் சிவசங்கர் ஷாக்கிங் தகவல்..!!

சென்னை பட்டினப்பாக்கம் பணிமனையை திறந்து வைத்த பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மைதான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார். ஆனால், அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை..? நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். SETC பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து இயக்குவதுதான் சரியாக இருக்கும்” என்றார்.

Chella

Next Post

சக மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த மாணவர்கள்..!! என்ன தண்டனை தெரியுமா..?

Tue Jan 23 , 2024
கடந்த 6ஆம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பிஏ., எல்எல்பி இறுதியாண்டு படிக்கும் 2 மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து குடிக்க வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கடந்த 10ஆம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட உதவி பேராசிரியர் தலைமையான விசாரணை குழு, […]

You May Like