fbpx

’இனி பேருந்துகளில் சில்லறை பிரச்சனை இருக்காது’..!! நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அதிரடி உத்தரவு..!!

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பயணிகள் பேருந்தில் ஏறும் போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனும் வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பேருந்துகளில் பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டினை வழங்க, அவர்கள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று மீதத்தொகையை வழங்க வேண்டும் என நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது

பணிமனைகளில் பணியின் போது நடத்துநர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்த வேண்டும். பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும், பேருந்துகளில் பயணிகள் ஏறும் போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது எனவும் இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் 40 நாட்களுக்கு பின் மரணம்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

Wed Nov 1 , 2023
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில், திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் தேதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில், இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் வரை நலமோடு […]

You May Like