கேரளாவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகளை சார், மேடம் என்று அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலினத்தை குறிக்கும் வகையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் அதனை பரிசீலனை செய்து கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும், ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீச்சர் என்று அழைக்கப்படுவதால் சமத்துவம், மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களுடனான பிணைப்பு அதிகரிக்க கூடும் என்று மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.