fbpx

இனி சுங்கச்சாவடிகள் இருக்காது.. கேமரா மூலம் சுங்கக்கட்டணம் வசூல்..? விரைவில் புதிய திட்டம்…

சுங்கச்சாவடிகளை அகற்றி கேமரா மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்..

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் அதற்கு பதிலாக, தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்களை பொருத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.. இது வாகன எண் பிளேட்களை படித்து வாகன உரிமையாளர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து தானாகவே கட்டணத்தை எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்..

இந்த முன்னோடி திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும், இந்த பரிவர்த்தனையை எளிதாக்குவதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் பேசிய அவர் “இப்போது, ​​டோல் பிளாசாக்களை அகற்றி, கேமராக்களை வைத்து, இந்த நம்பர் பிளேட்களைப் படித்து, நேரடியாக கணக்கில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும்..

இத்திட்டத்தை முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறோம். இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது.. சுங்கச்சாவடியை தவிர்த்துவிட்டு பணம் செலுத்தாத வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்க சட்டத்தின் கீழ் எந்த ஏற்பாடும் இல்லை. அந்த விதியை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த நம்பர் பிளேட்டுகள் இல்லாத கார்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறுவிக்கொள்வதற்கான ஏற்பாட்டை நாங்கள் கொண்டு வர உள்ளோம். இதற்கான மசோதாவை நாங்கள் கொண்டு வர வேண்டும்..” என்று தெரிவித்தார்..

​​தொடர்ந்து பேசிய அவர் “ மொத்த டோல் வசூலில் 97 சதவிகிதம், கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய், FASTags மூலம் நடக்கிறது. ஃபாஸ்டேக் மூலம் காட்டும் அரசாங்கத் தரவையும் மேற்கோள் காட்டியுள்ளது, ஒரு வாகனம் ஒரு சுங்கச்சாவடியைக் கடக்க சுமார் 47 வினாடிகள் ஆகும். டோல் வசூல் முறையில் ஒரு முழுமையான மறுசீரமைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு கடினமான பணியாகும், ஆனால் FASTag ஒரு பெரிய மாற்றமாகும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

கவனம்.‌‌.‌. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் செப்: 15 என அறிவிப்பு...! உடனே செய்து முடிக்க வேண்டும்...!

Thu Aug 25 , 2022
கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் தேசிய கோபால் ரத்னா விருதுகள் – 2022-க்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வரவேற்கிறது. கடந்த 01.08.2022 முதல் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 15.09.2022 ஆகும். இவ்விருதுகள் தேசிய பால்வள தினத்தையொட்டி, (26 நவம்பர் 2022) வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் நீடித்த வாழ்வாதாரத்திற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் […]

You May Like