fbpx

இனி ’Work From Home’ கிடையாது..!! விப்ரோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!! பணியாளர்கள் ஷாக்..!!

தங்களது பணியாளர்களிடம் நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது, புதிதாக தேர்ந்தெடுக்கப் போகும் பணியாளர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பது குறித்தும் விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி சவுபர் கோவில் விரிவாக பேசியுள்ளார்.

இனி தங்கள் நிறுவனம் அதிக சம்பளம் கொடுத்து புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்காது என்றும் புதிதாக சேர்ந்திருக்கும் பணியாளர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டால் நிறைய சலுகைகள் கொடுக்க தயாராக இருக்கிறோம் எனவும் அவர் கூறினார். ”2021ஆம் ஆண்டில் நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தன. எங்கள் நிறுவனத்திற்கும் நிறைய பணியாளர்கள் தேவைப்பட்டனர். இதனால் 30% சம்பளத்தை அதிகரித்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினோம். ஆனால், இப்போது அப்படியல்ல. செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் திறமை இருப்பவர்களுக்கே சம்பளம் அதிகம் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

மனிதவள மேம்பாட்டு துறையின் பெரும்பாலான செயல்பாடுகளை தானியங்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது விப்ரோ. அதன்மூலம், வேலைவாய்ப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு வரும் 80 சதவிகித கேள்விகளை பாட்கள் (Bots) மூலம் தீர்க்கலாம் என அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அப்போதுதான் மனிதவள அதிகாரிகளால் மேலாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்க முடிவதோடு எப்படி குழுவை கட்டமைத்து நன்றாக நிர்வகிக்கலாம் என்பதில் கவனம் செலுத்த முடியும். பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்ப்பதையே விப்ரோ விரும்புகிறது. ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்து வரும் பணியாளர்களை, வாரத்திற்கு 3 நாள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என கூறியிருக்கிறோம். அதிலும் சிலர் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்தில் வேலை பார்க்க தேவைப்படுகிறார்கள்.

விப்ரோ நிறுவனத்தில் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், டிசிஎஸ், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களைப் போல் அலுவலகத்தில் வந்து கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அலுவலகத்திற்கு வர வேண்டும் என பணியாளர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலைப்பார்க்க தயங்குகின்றனர். இந்த வேலைகளை வீட்டிலிருந்தே செய்யலாம். இதனால் எந்த உற்பத்தி திறனும் பாதிக்காது என்பது பணியாளர்களின் கருத்தாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

மற்றொரு புறம் ஐடி நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களில் 92 சதவீதம் பேர் ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் என்ற குறைவான சம்பளத்தில் பணி அமர்த்தப்படுகிறார்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இது மிகவும் குறைவான சம்பளம் ஆகும். இதற்கு முன்பு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு வருடத்திற்கு 6.5 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

Chella

Next Post

பரபரப்பு...! பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா...!

Sun Jun 18 , 2023
பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா. நாட்டின் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திருவாடுதுறை ஆதீனம் செங்கோல் வழங்கினார். தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சமூக நீதிக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பு மதச்சார்பற்ற செங்கோல் ஒன்றையும் வழங்கியது. மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூக நிதி பேரவை (மக்கள் சமூக நீதி வாரியம்) சனிக்கிழமை மாலை கர்நாடக முதல்வர் […]

You May Like