நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அன்னபூர்த்தி என்ற பெயரில் தற்போது ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை 30 விநாடிகளில் பெற்று கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது சோதனை அடிப்படையில் 3 ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பயனர்கள் விரல் வைத்தவுடன் 3 கிலோ கோதுமை மற்றும் 3 கிலோ அரிசி டெலிவரி செய்யப்படும். இதனால் தற்போது வாடிக்கையாளர்களின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.