தமிழ்நாடு அரசின் நில அளவீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் நிலஅளவை செய்ய எப்போது வேண்டுமானாலும் வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர்.
ஆனால், தற்போது வட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல், httstamilnilam.tn.gw.incitizen என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல். Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தலாம்.
தற்போது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அழைப்பு மூலம் தெரிவிக்கப்படும். நிலஅளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் hts eservicestngwin என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : திருத்தணியில் பயங்கரம்..!! 19 வயது இளைஞரை சுத்துப் போட்டு துடிதுடிக்க வெட்டிக் கொன்ற கும்பல்..!!