படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து வெளியூர்களில் தங்கி படித்தும், பணியாற்றியும் வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த சமயங்களில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். விடுமுறை காலங்களில் சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து தென் தமிழகத்திற்கே பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுவதால், வட தமிழக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய முயற்சி எடுத்துள்ளது.
அதன்படி, தமிழக அரசு இதுபோன்ற காலகட்டங்களில் தனியார் பேருந்துளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கிராமப்புற பேருந்துகள், வட தமிழக பேருந்துகள் தொலைதூரங்களுக்கு மாற்றி இயக்கப்படும் சூழலில் இந்த தனியார் பேருந்துகளை அந்த பேருந்துகளுக்கு மாற்றாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு எத்தனை முறை தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்ற விவரத்தையும், அதற்கான தொகையை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.20,000-க்கு மேல் வருமானம் வேண்டுமா..? அப்படினா கண்டிப்பா இதை மிஸ் பண்ணிடாதீங்க..!!