உலகில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. இங்கு நடக்கும் பல விசித்திர சம்பவங்கள் நமக்கு மலைப்பை ஏற்படுத்தும். அப்படி விசித்திரமான ஒன்று உலகில் உள்ள சூரியன் மறையாத இடங்கள். தொடர்ந்து 76 நாட்கள் வரை சூரிய அஸ்தமனம் இல்லாத இடங்கள் இந்த உலகில் உள்ளன என்று சொன்னால் கற்பனை செய்து பாருங்கள் அந்த இடங்கள் எப்படி இருக்கும் என்று. அப்படி உலகம் முழுவதும் சூரியன் மறையாத இடங்களை பற்றி பார்ப்போம்.
ஹேமர்ஃபெஸ்ட் சுமார் 8,000 மக்கள் வசிக்கும் வடக்கு நார்வேயில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது ஸ்ட்ரூவ் ஜியோடெடிக் ஆர்க்கின் ஒரு பகுதியாக இருப்பதால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் நள்ளிரவு 12:43 மணிக்கு சூரியன் மறைந்து 40 நிமிட இடைவெளியில் மீண்டும் உதயமாகும். நார்வே மிகவும் அழகான நாடு என்று உலகப் புகழ் பெற்றது. இது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி இங்குள்ள மக்கள் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர். இந்த நாடு ஆர்க்டிக் வட்டத்திற்குள் வருகிறது. அதனால் மே மற்றும் ஜூலை இடையே சுமார் 76 நாட்களுக்கு இங்கு சூரியன் மறைவதில்லை.
கிரேட் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு. கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெயர் பெற்றது. ஐஸ்லாந்தில் கோடைக்காலத்தில் இரவுகள் தெளிவாகவும் வெள்ளையாகவும் இருக்கும். ஜூன் மாதத்தில் சூரியன் ஒருபோதும் மறைவதில்லை. ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள கிரிம்சே தீவு மற்றும் அகுரேரி நகரம் ஆகியவை நள்ளிரவு சூரியனைப் பார்க்க சிறந்த இடங்கள்.
கிருணா ஸ்வீடனின் வடக்கே உள்ள நகரம். இந்த நகரத்தில் சுமார் 19,000 மக்கள் வசிக்கிறார்கள். இங்கு மே முதல் ஆகஸ்ட் வரை சுமார் 100 நாட்கள் சூரியன் மறைவதில்லை. கிருனாவின் ஆர்ட் நோவியோ தேவாலயம் ஸ்வீடனில் உள்ள மிக அழகான கட்டிடக்கலை சிறப்புமிக்க இடம். ஆர்க்டிக் வட்டத்திற்கு இரண்டு டிகிரி மேலே அமைந்துள்ள நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் வெறும் 3,000 மக்கள் வசிக்கும் நகரம். இங்கு குளிர்காலத்தில் தொடர்ந்து 30 நாட்கள் முழு இருளாக இருக்கும்.ஆனால் கோடை காலம் வந்துவிட்டால் இரண்டு மாதங்கள் தொடர்ந்து 24 மணிநேரமும் சூரியன் மறையாமல் காட்சியளிக்கும்.
1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கோடை காலத்தில் சுமார் மூன்று வாரங்களுக்கு 24 மணி நேரமும் பகலாக சூரிய ஒளி இருக்கும். ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஜூலை ஆரம்பம் வரை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வெள்ளை இரவுகள் என்று அழைக்கப்படும். 74° முதல் 82° வடக்கு வரையிலான அட்சரேகையில் அமைந்துள்ள துருவ கரடிகளின் நிலம் ஸ்வால்பார்ட். இங்கு ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஜூலை நடுப்பகுதி வரை நான்கு மாதங்களுக்கு சூரியன் மறைவதில்லை.
உலகின் இரண்டாவது பெரிய நாட்டில் உள்ள நகரம் யூகோன். ஆனால் இங்கு வடமேற்குப் பகுதியில் கோடை நாட்களில் 50 நாட்கள் தொடர்ந்து சூரியன் மறையாமல் வெளிச்சத்தை அள்ளி தெளித்து கொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் தீவுகளால் நிறைந்து காணப்படும் பின்லாந்து மிகவும் அழகான கவர்ச்சிகரமான நாடு. கோடைக்காலத்தில் சூரியன் சுமார் 73 நாட்கள் இங்கு ஒளி வீசிக்கொண்டே இருக்கும். இங்குள்ள மக்கள் கோடையில் குறைவான நேரமும் குளிர்காலத்தில் அதிகமான நேரமும் தூங்குவார்கள்.
கானாக் நகரம் கிரீன்லாந்தின் வடக்கில் 650 க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரம். இங்கு நள்ளிரவு சூரியன் இரண்டரை மாதங்கள் நீடிக்கும். உட்கியாகவிக் என்றும் அழைக்கப்படும் பாரோ சுமார் 4,500 மக்கள்தொகையை கொண்ட ஒரு சிறிய நகரம். இங்கு மூன்று மாதங்களுக்கு மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் மறைவதில்லை.