fbpx

எங்க தல தோனியை யாரும் நெருங்கக்கூட முடியாது!… முதலிடத்தில் டெத் ஓவர்களின் King!… ரெக்கார்ட்ஸ் இதோ!

ஐபிஎல் வரலாற்றில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் என்றாலே அதிகளவில் ரசிகர்களை வைத்திருப்பது சென்னை அணி தான். சென்னை அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய மற்றும் முதன்மை காரணம் தோனியே ஆகும். எப்போதும் அனைவரின் மனதிலும் தோனிக்கு என ஒரு தனியிடம் உண்டு. அதிலும் குறிப்பாக சென்னை சிஎஸ்கே அணியின் கோட்டை என்பதை தவிர்த்து இந்தியா முழுவதும் எந்த மைதானத்தில் தோனி விளையாடினாலும் மஞ்சள் நிறத்தில் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் சீசன் தொடங்கி தற்போதைய 16வது சீசன் வரை தோனியே கேப்டனாக இருந்து வருகிறார். இதில் 4 முறை சாம்பியன் பட்டத்தையும் தோனி தலைமையில் சி.எஸ்.கே. வென்று அசத்தியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் மஹேந்திர சிங் தோனியைப் போல எந்த வீரரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு தோனி கடைசி ஓவர்களில் பவுலர்களை கதிகலங்க வைத்துள்ளார். இறுதி ஓவர்களில்(16-20) தோனி விளையாடுகிறார் என்றால், எவ்வளவு ரன்கள் இலக்காக இருந்தாலும் பவுலர்கள் தான் அதிக அழுத்தமாக இருப்பார்கள். தோனி எந்த அழுத்தமும் எடுத்துக்கொள்ளாமல் எளிதாக சிக்ஸர் அடித்து விட்டு சென்றுவிடுவார். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனி, 16 முதல் 20 ஓவர்களில் விளையாடும் போது ஒட்டுமொத்தமாக 162 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வேறு எந்த வீரரும் தோனி போல பவுலர்களை டெத் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியதில்லை.

தோனிக்கு அடுத்தபடியாக டெத் ஓவர்களில் பொல்லார்டு 127 சிக்ஸர்களும், டிவில்லியர்ஸ் 112 சிக்ஸர்களும், ரஸல் 87 சிக்ஸர்களும், ரோஹித் 78 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். தோனிக்கும் 2-வது இடத்திலிருக்கும் பொல்லார்டுக்கும் 35 சிக்ஸர்கள் வித்தியாசம் இருக்கிறது. அந்த அளவிற்கு தோனியின் டெத் ஓவர் சாதனையை யாரும் சீக்கிரம் நெருங்கமுடியாத தூரத்தில் தல தோனி இருக்கிறார்.

Kokila

Next Post

உங்கள் நாக்கு மஞ்சள் நிறமாக மாறுகிறதா?... ஆபத்து!... 30 வினாடிகள் இதை மட்டும் செய்யுங்கள்!... எந்த நோயும் வராது!

Fri May 12 , 2023
நாக்கு முழுவதும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் ஆபத்து. இதனை தடுக்க பூண்டு சாறை நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளித்தால் பூஞ்சை தொற்று, கிருமிகள் நீங்கும். எல்லோரும் முத்துப் போல வெண்மையான பற்களை விரும்புகிறார்கள். ஆனால் நாக்கை எப்போதும் வெண்மையாக வைத்திருக்க மறந்துவிடுகிறார்கள். ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும். மேற்பரப்பில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் போதும். ஆனால் முழுவதும் வெள்ளை அல்லது […]

You May Like