சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளருமான தமிழிசை செளந்தரராஜன், ”தமிழக பாஜகவுக்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை நோக்கி பாஜக ஓடுகிறது. பாஜகவின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் வாலாக செயல்படுகிறார். கச்சத்தீவை மீட்க அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் நீட் தேர்வு குறித்து அவர்கள் எதுவுமே பேசவில்லை. டங்ஸ்டன் சுரங்க விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற அனைத்து திட்டங்களிலும் தமிழக உரிமையை விட்டு கொடுத்துவிட்டு திமுக நிற்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தன்னை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறார்கள். பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் மிகுந்த பயனுள்ளதாக ஒரே நாடு ஒரே தேர்தல் அமையும். இதை கருத்தரங்கு, கூட்டம், நாடகங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்” என்றார்.
Read More : வேங்கையல் சம்பவம்..!! அந்த செல்போன் ஆடியோ உண்மை தான்..!! ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்..!!