’Whats App’-ல் உங்கள் அனுமதியின்றி வேறு நபர் திறக்க முடியாதவாறு புதிய ’ஸ்கிரீன் லாக்’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றது.
’Whats App’பயனர்கள் வாட்ஸ் ஆப்பை திறக்கும் ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் கேட்கும். சரியான கடவுச் சொல் இருந்தால் மட்டுமே ’Whats App’-ஐ பயன்படுத்த முடியும். இதனால் ’Whats App’-ஐ உங்களைத் தவிர வேறொறு நபரால் பயன்படுத்த முடியாது. இந்த அம்சத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக ’Whats App’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
’Whats App’ செயலியில் பயனாளிகளின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ’call history’-ஐ எளிமையான முறையில் சரிபார்க்கும் வகையில் புதிய அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
’Whats App’ செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். ’Whats App’ பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது ’Whats App’-ல் உங்கள் செல்போனை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் சில சொந்த தகவல்களை பார்க்க நேரிடுகின்றது. எனவே வேறு யாரும் இனி உங்கள் ’Whats App’ செயலியை கடவுச் சொல் இல்லாமல் திறக்க முடியாது. இந்த புதிய வசதியும் விரைவில் கொண்டுவர உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவையில் குறுந்தகவல் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் வசதி இருந்தது. பின்னர் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு ஒவ்வொரு வசதியாக அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ கால் பேசுவதற்கு வேறொரு செயலியை தேட வேண்டியிருந்த நிலையில் ’Whats App’ செயலியில் கால் வசதி, வீடியோ கால் வசதி என வந்தது. பின்னர் குழுக்கள் அமைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்டேடஸ் வைக்கவும் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நமக்கு அட்வான்ஸ் வெர்சனாக வாட்ஸ்ஆப் கிடைப்பதில் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றார்கள்.