fbpx

’தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை’..! ஆனால், நாங்கள் போட்டியிடுவோம்..! – சீமான்

தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதை செயல்படுத்துவது தான் அவருக்கு தரும் உண்மையான மரியாதை என புகழாரம் சூட்டினார்.

’தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை’..! ஆனால், நாங்கள் போட்டியிடுவோம்..! - சீமான்

பெரியார் மண், அண்ணா மண் என்று சொல்லிக் கொண்டு எதையும் செய்யாமல் உள்ளனர். பெரியார் இருப்பார். ஆனால், மண் இருக்காது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை சாடி பேசியது குறித்து பதிலளித்த சீமான், ஜெயக்குமாருக்கு பணகொழப்பு நிறைந்துள்ளதாகவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார். தன்னை எதிர்த்து பேசும் ஜெயக்குமாரால், பாஜக-வை எதிர்த்து பேச முடியுமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். நீங்கள் பணத்தை முன்னிறுத்துகிறீர்கள். நாங்கள் மானமுள்ள இனத்தை முன்னிறுத்துகிறோம். தனித்துப் போட்டியிட யாருக்கும் திராணி இல்லை. அதிமுக, திமுக, பாஜக என யாருக்கும் தனித்துப் போட்டியிட திராணி இல்லை ஆனால் எங்களுக்கு உள்ளது. நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்றால் மக்களை நம்ப வேண்டும் நீங்கள் மக்களை நம்பவில்லை.

’தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லை’..! ஆனால், நாங்கள் போட்டியிடுவோம்..! - சீமான்

உறுதியான கோட்பாடு இருந்தால் அதை வைத்து மக்களிடம் வாக்கு கேளுங்கள். திராவிடம் என்றால் என்ன என விளக்கம் சொல்ல முடியாத கோட்பாட்டை கொண்டிருக்கிறார்கள். நாட்டையே அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர். பிரதமர் மோடி டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை. 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்திருக்க மாட்டார்கள். அனைத்திற்கும் விலை உயர்த்தி உள்ளனர். ஜிஎஸ்டியை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு திருப்பி கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள். எதற்கு இங்கிருந்து வாங்குகிறீர்கள். அப்புறம் எதற்கு நீங்கள் திரும்ப கொடுக்கிறீர்கள்?. மத்திய அரசு தனக்கென நிதி வருவாயை பெருக்கிக் கொள்வதற்கு ஏதாவது வைத்துள்ளதா? எல்லாமே தனியார் மயமாகி விட்டது. மத்திய அரசுக்கு என்று தனியாக நிதி உள்ளதா? மாநிலங்களின் வரி வருவாயை வாங்கித் தான் மத்திய அரசு நிதி பெறுகிறது”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

பவானி... காவிரி ஆற்றின் கரையோர குடியிருப்பு பகுதியில்.. வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பரிதவிப்பு...!

Wed Aug 3 , 2022
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவில் மழையின் அளவு வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை நிறைந்து உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், […]

You May Like