ஒருவேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த பொலிடிகல் சையின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் எனசொல்லியிருப்பார் ஜே.பி.நட்டா என பி.டி.ஆர். பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.கவில் படித்த தலைவர்கள் இல்லை அதனால்தான் நீட் தேர்வையும் தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு வந்தார். அதில் அவர் பேசுகையில் , திமுக தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாககேள்விபட்டேன். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகஇருந்தபோது அவர்கள் நீட்டை எதிர்த்தனர். திமுகவில் யாரும் படித்த தலைவர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் நீட்டை எதிர்க்கின்றனர். என அவர் கூறியிருந்தார்.
இதனிடையே திமுக தலைவர்களின் கல்வித் தகுதியை அக்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், ’’2 நாடுகளில் 3 பல்கலைக்கழகங்களில் 4 வெவ்வேறு படிப்புகளில் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி 4 பட்டங்கள் பெற்ற எனக்கு கல்வி தகுதி இல்லை’’பிரதமர் மோடி பொலிடிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார் ’’ என பதிவிட்டுள்ளார்.