கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி போயிங்கின் என்ற புதிய ஸ்டார்லைனரின் மூலம் விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அப்போது, விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் திட்டமிட்ட நாளில் பூமி திரும்ப முடியவில்லை. 8 நாள் பயணம் எனக் கூறப்பட்ட நிலையில், சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ், தற்போது 150 நாட்கள் கடந்தும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளார்.
இதனால் சமூக வலைத்தளங்கள் உட்பட பலரும் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது நாசா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ஒன்றில் சுனிதா வில்லியம்ஸ் உடல் எடை இழந்து எலும்பும் தோலுமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை குறித்த அச்சம் நாடு முழுவதும் பரவி வருகிறது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள நாசா, ”சுனிதா வில்லிம்ஸின் உடல்நிலை குறித்து தாங்கள் தீவிர அக்கறை செலுத்தி வருகிறோம். அதை முதல் முன்னுரிமையாக கருதி அவர் உடல் எடையை பழைய நிலைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
Read More : கிரெடிட் கார்டில் உங்களே தெரியாமல் மாயமாகும் பணம்..!! வாடிக்கையாளர்களே ஏமாந்துறாதீங்க..!!