fbpx

’உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது’..!! ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி..!!

அதிமுகவில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பதவி நீக்கம், தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விசாரணை செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். இந்த வழக்கினை இன்று முதல் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.

Chella

Next Post

பட்டப்படிப்பு!... ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது!… புதிய விதிமுறைகள் வெளியீடு!… மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!

Fri Jan 19 , 2024
16 வயதுக்குட்பட்ட மாணவர்களை பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது என்றும் பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களும் பயிற்சி நிறுவனங்களில் கற்பிக்க அனுமதிக்கப்படக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பயிற்சி மையத்தை ஒழுங்குபடுத்துவதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் 2024 மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், 16 வயதுக்குட்பட்ட இளைய மாணவர்களை பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது என்று பரிந்துரைக்கிறது. பயிற்சி மையங்கள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் தவறான […]

You May Like