தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், ஒரே நேரத்தில் தனது தவெக (தமிழக மாநில அரசியல் கட்சி) நிர்வாகத்தையும் கட்டமைக்க முக்கியமான நியமனங்கள் செய்து வருகிறார்.
நியமன பணிகள் தொடர்கின்றன: முதலில் மாநாட்டை நடத்திய விஜய், அதன் பிறகு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, மாவட்ட செயலாளர்கள் நியமன பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர் போன்ற பதவிகள் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து சமூக நலத்திட்டங்களில் பணியாற்றியவர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம்: விஜய் தலைமையிலான கட்சி, இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், மகளிர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, உள்ளிட்ட 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை சார்ந்த தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
மாவட்ட செயலாளர் நியமனம் – 95 பேர் நியமனம் முடிந்தது: இதுவரை ஐந்து கட்டங்களில் 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மீதமுள்ள மாவட்டங்களுக்கான நியமனங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனையூரில் விஜய் நேரடி ஆலோசனை: இன்றைய தினம், மீதமுள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு, பனையூர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் . இதில் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பணியூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அப்போது பைக்கில் வந்த தவெக தொண்டர்கள் விஜயின் காரை வழிமறைத்து மனு அளிக்க முயற்சி செய்துள்ளனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஆர்.கே நகர் தொகுதியை சேர்ந்த ஆர்.கே.மணி என்பவரை மாவட்ட செயலாளராக நியமிக்க உள்ளனர். அவரை நியமிக்க வேண்டாம் என்று கூறி மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவொற்றியூர் மாவட்டத்திற்கு மட்டும் தனி மாவட்ட செயலாளரை நியமிக்கவும் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உட்கட்சி பிரச்சனைகளுக்கு நடுவே விஜய்யின் ஆலோசனை மற்றும் இறுதிக்கட்ட மாவட்டச் செயலாளர் நியமனம் குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Thalaivar @TVKVijayHQ On the Way ✊🔥 pic.twitter.com/4F985HuK8S
— TVK Vijay Trends (@TVKVijayTrends) March 13, 2025