வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோட்டார் வாகன விதிகள் 1989ன் கீழ் பதிவு எண் பலகையில் ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்று தெளிவான விதி இருந்தும், வாகனத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் சாதி மற்றும் மதத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள், மற்ற அடையாளம் பொருந்திய ஒட்டுவதற்கு எதிராக பல்வேறு மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2-ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட் ‘1.0 மிமீ அலுமினியத்தால் செய்யப்பட்ட திடமான அலகு’ மற்றும் ‘இடதுபுற மையத்தில் நீல நிறத்தில் “IND” என்ற எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். நம்பர் பிளேட் விதிகளின்படி இல்லை என்றால், அதில் லேபிள்கள் அல்லது ஸ்டிக்கர்களை ஒட்டுவது உட்பட, வாகன சட்டத்தின் பிரிவு 192, கீழ் குற்றமாகும். இதற்கு ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வாகனத்தில் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும்…?
வாகனம் வாங்குவோர் அந்த விதிமுறைகளை பின்பற்றி தான் நம்பர் பிளேட் அமைக்க வேண்டும். அதன் படி, வாகனங்களின் முன்னும் பின்னும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். பின்னால் 35 மி.மீ உயரத்தில் 7 மி.மீ., அகலத்திலும் நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனத்தை பொறுத்த வரையில், 40 மி.மீ உயரத்திலும், 7 மி.மீ அகலத்திலும், நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும். வாகனத்தில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் இருக்கக் கூடாது.