fbpx

Vote: வாக்காளர் அட்டை இல்லையா?… இந்த 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!… தேர்தல் ஆணையம்!

Vote: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தலானது, ஏப்ரல் 19 தேதி தொடங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 17 வது மக்களவைக்கான காலமானது முடிவதற்குள் முன்பாகவே, அடுத்த வரவிருக்கும் 18-வது மக்களவையை அமைப்பதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்க தயாராக இருப்பார்கள். இந்த தருணத்தில் வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளன்று வாக்களிக்கும் போது, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும். ஒருவேளை, உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லையென்றால், பின்வரும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ), ஓட்டுனர் உரிமம், மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள், வங்கி/அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள், பான் கார்டு, NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு, MNREGA வேலை அட்டை (100 நாள் வேலை என அழைக்கப்படுகிற அட்டை) தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பிக்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிக்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் ஆதார் அட்டை ஆகிய இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்

Readmore: அதிமுகவுக்கு எதிராக அமமுக!… தேனி மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி!… வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Kokila

Next Post

Earthquake: சுனாமி எச்சரிக்கை?... அதிபயங்கர நிலநடுக்கம்!... ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு!

Sun Mar 24 , 2024
Earthquake: இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியாவில் அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. அதாவது அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் 32 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். […]

You May Like