fbpx

இயற்பியலுக்கான நோபல் பரிசு இரண்டு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!!

இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவா் ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவா், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தாா்.

தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவா் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினாா். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ஆம் தேதி பரிசு வழங்கப்படும். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, செயற்கை நரம்பியல் நெட்வொர்க் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடித்ததற்காக ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் தொடா்ந்து வேதியியல், இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாள்களிலும் அறிவிக்கப்படவுள்ளன.

Read more ; டெங்கு முதல் சர்க்கரை நோய் வரை தீர்வு.. பாப்பாளி இலை ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

English Summary

Nobel Prize in Physics announced to two scientists

Next Post

நிறத்தை காரணம் காட்டி சித்திரவதை.. திருமணம் ஆன சில நாளிலே மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவன்..!!

Tue Oct 8 , 2024
The Coimbatore police have arrested the husband and two others who sought divorce on the grounds of the woman's color.

You May Like