தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் விஜயகாந்த், ஏற்கனவே மியாட் மருத்துவமனையில் 3 வார காலம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி சிகிச்சை முடிந்து, நலமுடன் வீடு திரும்பினார். பின்னர் நடைப்பெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.