துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டியை, சோள காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள பகடப்பாடி வடக்கு காடு பகுதியில் வசிப்பவர் கருத்தாப்பிள்ளை. இவர் தனது குடும்பத்துடன் விவசாய தோட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது தம்பி, உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அந்த துக்க நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை கருத்தாப்பிள்ளையின் மனைவி ஜெயலட்சுமி (60) விவசாய தோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் ஸ்ரீதர் (22) மூதாட்டி ஜெயலஷ்மியை வழிமறித்து வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது மூதாட்டி ஜெயலட்சுமி சத்தம் போடவே அவரது கழுத்தை வாலிபர் ஸ்ரீதர் நெறித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்நிலையில், அவ்வழியாக வந்த தோட்ட உரிமையாளர் மக்காச்சோள காட்டில் சத்தம் கேட்கவே அவரது சென்ற இருசக்கர வாகத்தை நிறுத்திவிட்டு மக்காச்சோளம் தோட்டத்திற்கு ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது வாலிபர் ஸ்ரீதர் மூதாட்டியை விட்டுட்டு தப்பி ஓட முயன்ற போது வாலிபரை பிடித்து வீரகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் வலியால் துடிதுடித்த மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதை தொடர்ந்து பிடிப்பட்ட வாலிபர் ஸ்ரீதரை வீரகனூர் போலீசார், ஆத்தூர் மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த இளைஞர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.ஏற்படுத்தி உள்ளது.