fbpx

தொடங்கப்போகுது வடகிழக்கு பருவமழை..!! இந்த முறை இரண்டா..? எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் 3 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும் என்றும் ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழைப் பொழிவு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் 3 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும்.

தற்போது அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 21ஆம் தேதியை ஒட்டி துவங்கக் கூடும். இந்த இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, துவக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் வலு குறைந்து காணப்படும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களைப் பொறுத்தவரையில், அரபிக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடலுக்கு வரும் 23ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். வங்கக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Chella

Next Post

வலியால் கதறிய ஹர்திக்..!! 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பந்துவீசிய விராட் கோலி..!!

Thu Oct 19 , 2023
இந்தியா – வங்கதேசம் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 9-வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா, பந்தை தடுக்க முயன்றபோது, பந்து காலில் பலமாக பட்டதில் அவர் காயமடைந்தார். வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்து பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவர் அந்த ஓவரில் 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், காயம் காரணமாக வெளியேறியதால், மீதமுள்ள பந்துகளை […]

You May Like