fbpx

வடகிழக்கு பருவமழை..! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்..!

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை செயலாளர்களும் பங்கேற்றனர். இதில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வடகிழக்கு பருவமழை..! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்..!

குறிப்பாக வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தவும், துவக்கப்படாத பணிகளை விரைவில் துவங்கவும் அனைத்துத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

குழந்தை என்றும் பார்க்காமல் வேன் டிரைவர் செய்த அட்டூழியம்... பள்ளிக்கு சென்ற மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...!

Tue Sep 13 , 2022
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. வேறு உடையை யாரே சிறுமிக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் தாய் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் […]

You May Like