பெங்களூரில் இருந்து புறப்பட்டு அசாம் மாநிலத்திற்கு செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் வண்டியான கவுகாத்தி விரைவு வண்டி பெரம்பூர் வந்த போது பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வட மாநிலத்திற்கு செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் வட மாநிலத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏறி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இது குறித்து பெற்றோர்களிடம் மாணவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர், உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு மையத்துக்கு புகார் வந்துள்ளது,அந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார்ர் திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து கவுகாத்தி விரைவு ரயிலை திருவெற்றியூரில் நிறுத்தினர்.
முன்பதிவு செய்த பெட்டியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் சாதாரண டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு தங்கள் பெட்டிகளை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மேல் அமர்ந்தும் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் விடாமல் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை கண்ட போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர்
மேலும் 25 சதவீத வட மாநில மக்கள் கழிப்பறைனுள் சென்று பூட்டிக்கொண்டு விட்டதாகவும் எவ்வளவு தட்டினாலும் கதவை திறக்காததால் போலீசார் முயற்சியை கைவிட்டனர். போலீசாரையும் கண்டும் இறங்காத ஒரு சில வட மாநிலத்தவர்களை வலுக்கட்டாயமாக கீழே தள்ளினர் மேலும்அவர்களுடைய பொருட்களையும் அள்ளி தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட விரைவு வண்டியானது ஒரு மணி நேரம் தாமதமாக எடுக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி வழியாக அசாம் மாநிலத்திற்கு சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இது போன்று வட மாநிலத்தவர்கள் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் ஏறி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் அமர்ந்து கொண்டு இடம்கேட்டால் சண்டையிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களின் கவனக்குறைவினாலும் இது போன்ற சம்பவங்களை தொடர்வதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால், ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.