fbpx

17 வருடங்களாக மூச்சுக்குழாயில் இருந்த திருகாணி.!! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்.!!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் மூச்சுக்குழாயிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மூக்குத்தியின் திருகாணி வெற்றிகரமாக ஆகற்றப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் வர்ஷா. 35 வயதான இவ்வாறு கடந்த சில தினங்களாக இருமலால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

இதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென இருமும் போது சளியுடன் சேர்ந்து ரத்தமும் வந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வர்ஷா உடனடியாக மருத்துவரை சந்தித்து இருக்கிறார். மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

அப்போது வர்ஷாவின் மூச்சுக் குழாயில் ஒரு பொருள் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அது என்ன பொருள் என்று கண்டறிவதற்காக சிடி ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் வர்ஷாவின் மூச்சு குழாயில் மூக்குத்தியின் திருகாணி சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் திருகாணி வர்ஷாவின் மூச்சிக் குழாயிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது. கடந்த 17 வருடங்களுக்கு முன் தனது திருமணத்தின்போது பயன்படுத்திய மூக்குத்தியின் திருகாணி இது என குறிப்பிட்டு இருக்கிறார் .

இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள் மூச்சிக் குழாயிலிருந்து உணவுப் பொருட்கள் உலர் பழங்கள் போன்றவற்றை இதற்கும் உன் அகற்றி இருக்கிறோம். ஆனால் மூக்குத்தியின் திருகாணியை அகற்றுவது இதுவே முதல் முறை. இது மிகவும் அரிதான நிகழ்வு என குறிப்பிட்டனர்.

Read More: “தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது” வஞ்சிக்கும் பாஜக அரசு..! முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!

Next Post

சற்றுமுன்: வட மத்திய மும்பை தொகுதியில் பிரபல வழக்கறிஞரை வேட்பாளராக அறிவித்த பாஜக..!

Sat Apr 27 , 2024
முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த பிரமோத் மகாஜனின் மகளும், தற்போதைய மக்களவை எம்பியுமான பூனம் மகாஜனுக்குப் பதிலாக, மும்பை வட மத்திய மக்களவைத் தொகுதிக்கு வழக்கறிஞர் உஜ்வல் தியோராய் நிகாமை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், மறைந்த நடிகரும் காங்கிரஸ் தலைவருமான சுனில் தத்தின் மகளும், தற்போதைய எம்பியுமான பிரியா தத்தை எதிர்த்து, மும்பை வடக்கு மத்திய தொகுதியில் இருந்து மகாஜன் வெற்றி பெற்றார். 2019 பொதுத் […]

You May Like